அமெரிக்காவில் பரவத் துவங்கும் ஒமிக்ரோன் வைரஸ்

 அமெரிக்காவில் பரவத் துவங்கும் ஒமிக்ரோன் வைரஸ்

புதிய உருமாற்றம் அடைந்துள்ள ‘ஒமிக்ரோன்’ என்ற கொரோனா வைரஸ் வகை, அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கும் பரவத் துவங்கியுள்ளது.

பல வகைகளில் உருமாறியுள்ள ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் முதலில் தென் ஆப்ரிக்காவில் தென்பட்டது. பிறகு பல நாடுகளுக்கு பரவத் துவங்கியுள்ளது. அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு வருகின்றனர்.ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் அங்கு தீவிரமாக உள்ளது. மருத்துவமனைகளில், படுக்கை வசதி மற்றும் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுஉள்ளது. இந நிலையில் ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பும் துவங்கியுள்ளதால் அமெரிக்க மாகாணங்களின் சுகாதார அமைப்புகள் அச்சத்தில் உள்ளன.

நியூயோர்க்கில் மட்டும் நேற்று ஒரே நாளில் மூன்று பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைஅடுத்து அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.ஏற்கனவே நெப்ராஸ்கா, மினசோட்டா, கலிபோர்னியா, ஹவாய், கலரோடா, உத்தாஹ் மாகாணங்களில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது நியூஜெர்சி, ஜார்ஜியா, பென்சில்வேனியா, மேரிலேண்டிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது

. அதே நேரத்தில் கடந்த சில மாதங்களில் எந்த பயணமும் மேற்கொள்ளாதவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலானோருக்கு லேசானது முதல் சற்று தீவிர அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதேபோல், இந்த தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பகுதியினர் ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பயண கட்டுப்பாடு’ஒமிக்ரோன்’ வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டு பயணியருக்கு புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து நாடுகளில் இருந்தும் வரும் பயணியர், கொரோனா தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Udayasooriyan Editor

0 Reviews