தினேஷ் கார்த்திக்கிற்கு இரட்டை குழந்தைகள்!

 தினேஷ் கார்த்திக்கிற்கு இரட்டை குழந்தைகள்!

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்-தீபிகா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

தினேஷ் கார்த்திக். தமிழகத்தை சேர்ந்த இவர், பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கல்லை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை தன்னுடைய டுவிட்டர் பதிவின் மூலம் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

அதில் அவர், “எனக்கும் தீபிகாவுக்கும் இரண்டு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் எங்கள் குடும்பத்தினரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இவர்களின் பெயர் கபீர் பள்ளிகல் கார்த்திக் மற்றும் ஜியான் பள்ளிகல் கார்த்திக்” என்று அதில் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

Udayasooriyan Editor

0 Reviews