இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றம்: 13 பேர் பலி; 57 பேர் காயம்

 இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றம்: 13 பேர் பலி; 57 பேர் காயம்

ந்தோனேஷியாவில் ‘செமேரு’ எரிமலையில் இருந்து எரிமலைக்குழம்பு சீற்றத்துடன் வெளியேறி வருகிறது. இதில் சிக்கி, 13 பேர் உயிரிழந்துள்ளனர்; 57 பேர் காயமடைந்து உள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் செமேரு என்ற எரிமலை உள்ளது. 3,676 மீட்டர் உயரமான இந்த எரிமலை அமைந்துள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது.10 ஆயிரம் மீட்டர்இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த எரிமலையில் இருந்து எரிமலைக் குழம்பு வெளியேறத் துவங்கியது. இதனால் எரிமலையில் இருந்து 10 ஆயிரம் மீட்டர் உயரம் வரை சாம்பல் பீறிட்டு வெளியேறி வருகிறது.

அந்த சாம்பல், எரிமலையை சுற்றி இருக்கும் பகுதிகளிலும் பரவத் துவங்கி உள்ளது. நிவாரண உதவிஅங்குள்ள கிராமங்கள் அனைத்திலும் ஒரு ஆள் உயரத்திற்கு சாம்பல் சூழ்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீருடன் சாம்பல் சேர்ந்து, சகதியாக காட்சிஅளிக்கிறது.எரிமலையில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள நதி இருக்கும் பகுதி வரை, எரிமலைக் குழம்பு வழிந்தோடுவதால் அதற்கு இடையே இருக்கும் அனைத்து இடங்களும் தீக்கு இரையாகின.

பாதுகாப்பு நடவடிக்கையாக எரிமலைக்கு 5 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் மக்கள் தற்காலிக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் செய்யப்பட்டுள்ளன.கவலைக்கிடம்இந்த எரிமலைக் குழம்பில் ஏற்பட்ட தீக்காயங்களால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 57 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 16 பேர், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Udayasooriyan Editor

0 Reviews