இன்றும் மின்வெட்டு அமுல்

 இன்றும் மின்வெட்டு அமுல்

தினமும் (12) குறிப்பிட்ட பல பகுதிகளில் இரவு வேளையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி வத்தளை, கல்கிஸை, இரத்மலானை, மஹரகம, பொரலஸ்கமுவ, நுகேகொடை, அக்குரஸ்ஸ, பிபில, கெக்கிராவ, மாலபே போன்ற பகுதிகளில் மின்சார துண்டிப்பு இடம்பெற்றதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் வலய ரீதியாக இன்று சுமார் ஒரு மணிநேரத்திற்கு மின் வெட்டு அமுலாக்கும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப கோளாறினால் பாதிக்கப்பட்ட களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தின் திருத்தப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அதன் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

Udayasooriyan Editor

0 Reviews