இம்மாதம் 28 வெளியாகிறது மலையக குறும்படம் “ஓடை”

 இம்மாதம் 28 வெளியாகிறது மலையக குறும்படம் “ஓடை”

 

நீலமேகம் பிரசாந்த்

மலையக,தமிழ் மக்களின் சமூக வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஓடை திரைப்படம் இம்மாதம் 28ம் திகதி வெளியாகவுள்ளது.மலையக குறும்பட இயக்குனர்
சகாதேவன் தயாளன் இயக்கத்தில் கந்தையா துஷாந்தன், ஆனந்தகுமாரி நடிப்பில் திருநாவுக்கரசர் இசையில் இக்குறும்படம் வெளிவர தயாராக உள்ளது.இக்குறும்படத்தின் முதல் காட்சி 28/02/2021 காலை 10 மணிக்கு கொட்டக்கலை Green Hill Retreat Centre ல் இடம்பெறவுள்ளது.

இப்படம் தொடர்பில் இயக்குனர் தயாளன் குறிப்பிடுகின்ற போது
இத் திரைப்படத்தின் கருப் பொருள் அனைத்து சமூகத்திற்கும் பொருந்த கூடியதே, ஐந்து மாத கால தேடலின் விளைவாக உருவான ஓர் உண்மை கதையின் தழுவல் ஓடை யாக உருவெடுத்துள்ளது.

ஊற்று நீர் தூய்மையானதே ஆனால் அது ஓடையாக மாறி
மனிதர்கள் மத்தியில் புரண்டோடும் போது அசுத்தமாகிறது நிறம் மாறுகிறது. தன்நிலை மாறுகிறது. தேங்கிய நீர் அசுத்தமாகும்….
ஓட ஓட நீர் தூய்மையாகும். இது விஞ்ஞானம்.

வாழ்க்கையும் ஓடையாக தான் கரு வளர்ந்து குழந்தையாகி குழந்தை பிள்ளையாகி பிள்ளை இளமையாக பாலுறுப்பால் பிரிக்கப்பட்டு மண்டைக்குள் பலதையும் திணித்து வளர்ந்து வருகின்றான்.

இந்த ஓடை திரைப்படம் சமூகத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைக்கதையின் தொகுப்பு.நிச்சயம் இத்திரைப்படம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமென கூறினார்.

Udayasooriyan Editor

0 Reviews