இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன்

 இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன்

இலங்கையிலும் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கே ஒமிக்ரோன் தொற்றுள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பரவலைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து இலங்கை உட்பட பல நாடுகள் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பயணத் தடைகளை விதித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Udayasooriyan Editor

0 Reviews