உலகளவில் 18 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு; 38.97 லட்சம் பேர் உயிரிழப்பு

 உலகளவில் 18 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு; 38.97 லட்சம் பேர் உயிரிழப்பு

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் தற்போது 17,99,09,844 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,46,66,828 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38 லட்சத்து 97 ஆயிரத்து 354 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் தற்போது 1,13,45,662 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச பாதிப்பு பிரேசில் நாட்டில் பதிவாகியுள்ளது. அங்கு புதிதாக 86,833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,080 பேர் உயிரிழந்துள்ளனர்.

Udayasooriyan Editor

0 Reviews