எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் !!

 எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் !!

எதிர்காலத்தில் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள சுமார் 300 கொள்கலன்கள் உடனடியாக விடுவிக்கப்படாவிட்டால், இந்த நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொள்கலன்களை விடுவிக்க அரசாங்கம் இதுவரையில் மாற்று வழியை முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Udayasooriyan Editor

0 Reviews