குளவிக் கொட்டுக்கு இலக்காகி 4 பிள்ளைகளின் தந்தை பலி

 குளவிக் கொட்டுக்கு இலக்காகி 4 பிள்ளைகளின் தந்தை பலி

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ஹொலிவூட் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் அந்தோணி சூசை வயது 73 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்

குறித்த நபர் விறகு வெட்ட செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். விறகு வெட்ட சென்ற நபர் நீண்டநேரம் வராததன் காரணமாக பிரதேசவாசிகள் அவரை தேடி சென்றுள்ளனர்.

அப்போது அவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி விழுந்து கிடந்ததாகவும் அதனைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணமடைந்ததாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அக்கரப்பத்தனை நிருபர்

Udayasooriyan Editor

0 Reviews