குழந்தைகளுக்கு சத்தான கேரட் சப்பாத்தி

 குழந்தைகளுக்கு சத்தான கேரட் சப்பாத்தி

காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சப்பாத்தியில் காய்கறிகளை வைத்து செய்து கொடுக்கலாம். சரி எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

துருவிய கேரட் – ஒரு கப்

நறுக்கிய வெங்காயத்தாள் – கால் கப்

நறுக்கிய பச்சைமிளகாய் – ஒரு டீஸ்பூன்

கோதுமைமாவு – ஒன்றரை கப்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயத்தாள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் கோதுமைமாவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு மாவை சப்பாத்திகளாக திரட்டி வைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். சத்தான சுவையான கேரட் சப்பாத்தி ரெடி.

Udayasooriyan Editor

0 Reviews