கெடு முடிந்த பிறகும் ஆப்கானியர்கள் வெளியேற அனுமதிப்போம் – தலிபான்கள் உறுதி

 கெடு முடிந்த பிறகும் ஆப்கானியர்கள் வெளியேற அனுமதிப்போம் – தலிபான்கள் உறுதி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான கெடு முடிந்த பிறகும், நாட்டை விட்டு செல்ல விரும்பும் ஆப்கானியர்களை தடுக்க மாட்டோம் என தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த தகவலை ஜெர்மனி தூதர் உறுதி செய்துள்ளார்.
 
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதலாக, அந்நாட்டில் இருந்து ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர். தொடர்ந்து காபூல் விமான நிலையத்தை சுற்றிலும் ஏராளமானோர் குழுமி வருகின்றனர். தற்போதைக்கு காபூல் விமான நிலையத்தில் மட்டும் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு ராணுவத்தினர், ஆப்கானிஸ்தானில் இருந்து செல்ல விரும்புவோரை விமானம் மூலம் ஏற்றி வழியனுப்பி வருகின்றனர்.
image
எனினும் அமெரிக்க படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் முழுமையாக வெளியேற வேண்டும் என்ற கெடு முடிந்தவுடன், ஆப்கானியர்கள் வெளியேற அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறிய பின்னரும், ஆப்கானியர்கள் நாட்டை விட்டுச் செல்வதற்கு தடை விதிக்க மாட்டோம் என தலிபான்கள் தெரிவித்திருப்பதாக ஜெர்மனி தூதர் தெரிவித்துள்ளார்.

Udayasooriyan Editor

0 Reviews