சினிமா பிரபலங்களின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத் தொகுப்பு!

 சினிமா பிரபலங்களின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத் தொகுப்பு!

 

புத்தாண்டு பிறந்துள்ளதையடுத்து சினிமா பிரபலங்கள் தங்கள் புதிய புகைப்படங்களை புத்துணர்ச்சியுடன் வெளியிட்டு புத்தாண்டை சிறப்பித்துள்ளனர். இதோ, அந்தப் புகைப்படங்களின் தொகுப்புகள்!

நடிகர் தனுஷ் டபுள் சந்தோஷத்தில் புத்தாண்டைக் கொண்டாடியுள்ளார். அவரின் மனைவி ஐஸ்வர்யா தனுஷின் பிறந்தநாள் ஜன.01


மனைவி, தனது அண்ணன் செல்வராகவன், அண்ணி கீதாஞ்சலி, அண்ணன் குழந்தைகள் என்று அனைவருடனும் புத்தாண்டை சிறப்பித்துள்ளார்.

 

நயன்தாரா புத்தாண்டை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துகளை கூறியுள்ளார்.
அந்தப் புகைப்படங்களில் புத்தாண்டு உற்சாகத்துடன் நீல நிற உடையில்தேவதையாக நயன்தாரா மின்னுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

நடிகை காஜல் அகர்வால் குளுகுளு பனிமலையில் நனைந்தபடி புத்தாண்டை கணவர் கெளதம் கிட்சிலுவுடன் கொண்டாடியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி கையில் அன்போடு நாயை வைத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நடிகை மாளவிகா மோகனன் கேரளாவில் தனது குடும்பத்தினருடன் புத்தாண்டை சிறப்பித்துள்ளார்.


நடிகை த்ரிஷா வழக்கம்போல் தனது தோழிகளுடன் புத்தாண்டை உற்சாகமுடன் கொண்டாடியிருக்கிறார்.

நடிகை அஞ்சலி வரிக்குதிரைகள் பின்னணியில் புதிய போட்டோஷூட் போட்டு புத்தாண்டை வரவேற்றுள்ளார்.

நடிகர் சிம்பு கோயில் வழிபடும் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.

Udayasooriyan Editor

0 Reviews