சிலி நாட்டில் புதிய டைனோசர் இனம் கண்டுபிடிப்பு: 7.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது

 சிலி நாட்டில் புதிய டைனோசர் இனம் கண்டுபிடிப்பு: 7.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது

சிலி நாட்டைச் சேர்ந்த பழங்கால உயிரினங்கள் குறித்த ஆய்வாளர்கள் ஏழரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்பு கூட்டில் 80 சதவீதத்தை கண்டுபிடித்துள்ளதாக அறிக்கை சமர்பித்துள்ளனர்.

சிலியில் சாண்டியாகோவிற்கு தெற்கே 3 ஆயிரம் தொலைவில் லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் செர்ரோ கீதோ எனும் பகுதி உள்ளது. இங்கு 15 கிலோமீட்டர் நீளத்திற்கு பல்வேறு பாறைகள், புதைப்படிவங்கள் உள்ளன. அகழ்வாராய்ச்சி தளமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இங்கு அகழ்வாராய்ச்சியின் போது டைனோசரின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனை பழங்கால உயிரினங்கள் குறித்த ஆய்வாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அது குறித்த அறிக்கையை சிலி பல்கலைக்கழகத்தில் தற்போது விளக்கியுள்ளனர்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: 7.1 முதல் 7.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அந்த பகுதியில் வாழ்ந்ததாக மதிப்பிடுகின்றோம். 7 அடி நீளமும், 150 கிலோ எடையும் கொண்ட ஒரு தாவர உண்ணி இது. ஏற்கனவே அறியப்பட்ட டைனோசர் இனத்தை ஆராய்வதாக நம்பினோம்.

ஆனால் அதன் வாலை ஆராய்ந்த போது தான் இது புதிய இனம் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டோம். இதன் வால் ஏழு ஜோடி ஆஸ்டியோடெர்ம்களால் (தோல் அடுக்குகளில் அமைந்துள்ள எலும்புத் தகடுகள்) மூடப்பட்டிருந்தது. பெரணி தாவரம் போன்ற அதன் மூலம் நமக்குத் தெரிந்த டைனோசர்களிலிருந்து மாறுபட்ட ஆயுதத்தை இது உருவாக்குகிறது. என கூறியுள்ளனர்.

Udayasooriyan Editor

0 Reviews