தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அவசரநிலை தவிர யாரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.

 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அவசரநிலை தவிர யாரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.

ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது நடமாட்டத்தை கண்காணிக்க நேற்று முதல் சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக  டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்.

இது தொடர்பாக இலங்கை விமானப்படையின் உயர் தொழில்நுட்ப ட்ரோன்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹாவில் பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை இந்த கண்காணிப்புகள் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இருப்பதில்லை . ட்ரோன்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்ய சிறப்பு பாதுகாப்பு குழுக்கள், எஸ்.டி.எஃப் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி அஜித் ரோஹான மேலும் தெரிவித்தார்.

அவசரநிலை தவிர யாரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அவசரநிலை ஏற்பட்டால், ஆம்புலன்ஸ் உதவியை பெறலாம் அல்லது 0113- 422558 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Udayasooriyan Editor

0 Reviews