நமக்கு நாமே கிச்சுக்கிச்சு மூட்டினால் சிரிப்பு வருவதில்லை ஏன் ?

 நமக்கு நாமே கிச்சுக்கிச்சு மூட்டினால் சிரிப்பு வருவதில்லை ஏன் ?

மற்றவர்கள் நம்மை கூச்சம் உள்ள பகுதியில் தொடும்போதோ அல்லது கிச்சுக்கிச்சு மூட்டும் போதோ கூச்சம் அல்லது சிரிப்பு ஏற்படுகிறது. காரணம் என்னவென்றால் தோலின் அடியில் உள்ள நரம்புகள் சமிக்ஞைகளை மூளையின் சோமாட்டோசென்சரி கார்டெக்ஸ் பகுதிக்கு அனுப்பும். இதனை சிங்குலேட் கார்டெக்ஸ் (cingulated cortex) பகுதி பகுப்பாய்வு செய்கிறது.மூளையின் இந்த பகுதி மகிழ்ச்சிகரமான உணர்வுகளை நிர்வகிக்கிறது. எனவே சிரிப்பு ஏற்படுகிறது.

பெண்களைவிட ஆண்களே அதிக உடல் கூச்சம் கொண்டவர்கள் என்கிறது ஒரு ஆய்வு.

நம்மை நாமே கிச்சுக்கிச்சு மூட்டிக்கொள்ளும்போது, தொடு உணர்வுக்கான மூளைப் பகுதிக்கு நமது சிறுமூளை முன்கூட்டியே தகவலை சொல்லி விடுகிறது. எனவே அது தொடுதலை எதிர்பார்க்கிறது. எந்தப் பகுதியில், என்ன செய்யப் போகிறோம் என்பது நமது மூளைக்கு முன்கூட்டியே தெரிந்துவிடுவதால் கூச்சமோ, சிரிப்போ தோன்றுவதில்லை.

*இந்த கிச்சுக்கிச்சு ( கூச்ச உணர்வு ) ஆபத்து காலங்களில் உடல் ஏற்படுத்தும் அனிச்சை செயல் போன்றதே.

Udayasooriyan Editor

0 Reviews