நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

 நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதாரச் சட்டங்களைப் புறக்கணித்து பலர் தன்னிச்சையாகச் செயல்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் இந்த எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டிருந்தது.

எனினும், தொடர்ச்சியாக விடுமுறை வந்த வார இறுதி நாட்களின் போது பலரும் பல்வேறு பொது இடங்களுக்கு சென்றிருந்தனர். இதன்போது அதிகளவானவர்கள் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை.

எனவே, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளையும், தங்களையும் பாதுகாக்கும் வகையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Udayasooriyan Editor

0 Reviews