நாய்க்கு வளைகாப்பு

 நாய்க்கு வளைகாப்பு

துரை நகர் நுண்ணறிவுபிரிவு எஸ்.ஐ., சக்திவேல். இவர் சிகப்பி, சுஜி ஆகிய பெண் நாய்களை வளர்க்கிறார்.

சுஜி கர்ப்பமடைந்து 50வது நாள் ஆனது. அதற்கு வளைகாப்பு ஏற்பாடு செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நேற்று வீட்டில் நடத்திய விழாவில் நாய்க்கு புத்தாடை அணிந்து, மாலையிட்டு கன்னத்தில் சந்தனம் தடவி, கைகளில் கலர் வளையல்கள் அணிவித்தார்; கர்ப்பிணி பெண்ணிற்கு செய்யும் சடங்குகளை சுஜிக்கும் செய்து அசத்தினார்.

தொடர்ந்து சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட ஐந்து வகை சாதங்கள் சமைத்து, வளைகாப்பில் பங்கேற்றவர்களுக்கு விருந்து படைத்தார்.சக்திவேல் கூறுகையில், ”மனைவியின் ஆலோசனைப்படி வளைகாப்பு நடத்தப்பட்டது. 60 நாட்களில் நாய் பிரசவிக்கும் என்பதால், 50வது நாளில் வளைகாப்பு நடத்தினோம்,” என்றார்.

Udayasooriyan Editor

0 Reviews