நாளாந்தம் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை!

 நாளாந்தம் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டிற்கு நாளாந்தம் 3 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த வகையில், நேற்றைய தினம் வரை நாட்டுக்கு 46 ஆயிரத்து 942 பேர் வருகை தந்துள்ளதாக அந்த சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக 22 வெளிநாட்டு விமான நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல விமான சேவை நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவை உறவுகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Udayasooriyan Editor

0 Reviews