நுவரெலியா, மாத்தளையில் 08 நிலையங்களில் தடுப்பூசி….

 நுவரெலியா, மாத்தளையில் 08 நிலையங்களில் தடுப்பூசி….

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி இன்றும் 438 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 18 இடங்களில் தடுப்பூசி ஏற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 31 இடங்களில் தடுப்பூசி ஏற்றப்படுகிறது.

களுத்துறை மாவட்டத்தில் 15 இடங்களில் தடுப்பூசி ஏற்றப்படுவதுடன், குருநாகல் மாவட்டத்தில் 25 இடங்களில் தடுப்பூசி ஏற்றபடுவதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 84 மத்திய நிலையங்களில் தடுப்பூசி ஏற்றப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தில் 52 இடங்களில் தடுப்பூசி ஏற்றப்படுவதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 22 மத்திய நிலையங்களில் தடுப்பூசி ஏற்றப்படுவதாக இராணுவத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டியில் 25 இடங்களிலும் நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 08 நிலையங்களிலும் தடுப்பூசி ஏற்றப்படுகிறது.

பதுளை, மொனராகலை, காலி மாவட்டங்களில் 31 நிலையங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 98 மத்திய நிலையங்களிலும் தடுப்பூசி ஏற்றப்படுகிறது.

கேகாலையில் 05 இடங்களிலும் அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களில் 20 நிலையங்களிலும் தடுப்பூசி ஏற்றப்படுவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

Udayasooriyan Editor

0 Reviews