பதுளை மாவட்டத்தில் இன்று 4 கொரோனா மரணங்கள் தொற்றாளர் எண்ணிக்கை 490 ஆக அதிகரிப்பு

 பதுளை மாவட்டத்தில் இன்று 4 கொரோனா மரணங்கள் தொற்றாளர் எண்ணிக்கை 490 ஆக அதிகரிப்பு

பதுளை மாவட்டத்தில் 23-11-2021ல் (இன்று) கோவிட் 19 தொற்றினால் நான்கு பேர் உயிரிழந்ததுடன், மாவட்டத்தின் மொத்த மரணங்கள் 490 பேராக அதிகரித்துள்ளதாக பதுளை மாவட்ட சுகாதார சேவைப் பணியகம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமே, இம் மரணங்கள் பதிவாகியுள்ளன. பதுளை – 65 பேர், பண்டாரவளை – 55 பேர், எல்ல – 12 பேர்;, ஹல்துமுள்ளை – 23 பேர், ஹாலிஎலை – 53 பேர், அப்புத்தளை – 41 பேர், கந்தகெட்டிய – 07 பேர், லுணுகலை – 15 பேர், மகியங்கனை – 60 பேர், மீகாகியுல – 12 பேர், பசறை – 31 பேர், ரிதிமாலியத்தை – 12 பேர், சொரணாதொட்டை – 10 பேர், ஊவா பரணகமை – 33 பேர், வெலிமடை – 61 பேர் என்ற வகையில் மொத்த மரணங்கள் 490 ஆகும்.

மேற்படி 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 23-11-2021 மட்டும் 84 பேருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரையிலான காலப்பகுதியில் மொத்த தொற்றாளர்களாக 31 ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு (31254) பேர் பதிவாகியிருக்கின்றனர்.

இவ்வகையில், பதுளை – 4077 பேர், பண்டாரவளை – 2941 பேர், எல்ல – 1370 பேர், ஹல்துமுள்ளை – 1510 பேர், ஹாலி-எலை – 2052 பேர், அப்புத்தளை – 1874 பேர், கந்தகெட்டிய – 1045 பேர், லுணுகலை – 1284 பேர், மகியங்கனை – 4145 பேர், மீகாகியுல – 835 பேர், பசறை – 1971 பேர், ரிதிமாலியத்தை – 2787 பேர், சொரணாதொட்டை – 604 பேர், ஊவா – பரணகமை – 1767 பேர், வெலிமடை – 2992 பேர் என்ற வகையில் 31254 பேர், கோவிட் 19 தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
23-11-2021ல் பதுளை – 01. பண்டாரவளை – 01, ஹாலி-எலை – 01, பசறை – 01 என்ற வகையில் கோவிட் 19 மரணங்கள் நான்கு இடம்பெற்றுள்ளன.

கோவிட் 19 தொற்றாளர்கள் 31254 பேரில் 25 ஆயிரம் பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். மிகுதி 6254 பேரில் 490 பேர் மரணமடைய 5764 பேர் கோவிட் 19 சிகிச்சை நிலையங்களிலும், தத்தம் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூன்று வகுப்புகளைக் கொண்ட
பாடசாலைக் கட்டிடத் தொகுதி மூடப்பட்டது.
பதுளை மாவட்டத்தின் சொரகுன மகா வித்தியாலயத்தில் 2,5,10 ஆகிய வகுப்புக்களைக் கொண்ட கட்டிடத் தொகுதி 23-11-2021 முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சமன் ஜீவந்த தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட பாடசாலையின் 5 மாணவர்களுக்கு கோவிட் 19 தொற்று உறுதியானதையடுத்தே, குறிப்பிட்ட வித்தியாலயம் மூடப்பட்டுள்ளது .
குறிப்பிட்ட வித்தியாலயத்தில் 40 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனையில் 5 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இம் மாணவர்கள் 23-11-2021, கோவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வித்தியாலய அதிபர் பஞ்ஞானந்த தேரர், மேற்படி பாடசாலையின் மூன்று வகுப்புக்களைக் கொண்ட கட்டிடத் தொகுதி மூடப்பட்டிருப்பதை உறுதிசெய்தார்.

எம். செல்வராஜா

Udayasooriyan Editor

0 Reviews