`பாரதி கண்ணம்மா’ தொடரின் அடுத்த கண்ணம்மா இவர்தானா? யார் இந்த வினுஷா தேவி?

 `பாரதி கண்ணம்மா’ தொடரின் அடுத்த கண்ணம்மா இவர்தானா? யார் இந்த வினுஷா தேவி?

பிரைம் டைமில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடர் ‘பாரதி கண்ணம்மா’. இந்தத் தொடரில் நாயகியாக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர், ரோஷினி. பாரதி – கண்ணம்மா சண்டைகள், சீரியலில் நடக்கும் சம்பவங்கள் போன்றவற்றை வைத்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது மீம்ஸ் களைகட்டும்.

இந்நிலையில், ரோஷினி சில பர்சனல் காரணங்களுக்காக ‘பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறுகிறார். இந்த வாரத்துடன் ஷூட்டிங் முடித்துவிட்டு சீரியலிலிருந்து வெளியேற இருக்கிறார். வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், சினிமா வாய்ப்புகளுக்காக சீரியலில் இருந்து விலகுகிறார் என ஒரு தரப்பினர் சொல்கின்றனர்.

இந்நிலையில், ரோஷினிக்குப் பதிலாக வினுஷா தேவி என்பவர் ‘கண்ணம்மா’ கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மாடலிங், டிக்டாக் மூலம் பிரபலமானவர், வினுஷா. இவரும் டஸ்க்கி ஸ்கின் டோன் கொண்டவர் என்பதால் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்று இவரை சேனலில் முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ரோஷினியின் விலகல் குறித்தோ, வினுஷா தேவி தொடரில் இணைவது குறித்தோ சேனல் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை.

Udayasooriyan Editor

0 Reviews