மக்களின் எதிர்ப்பார்ப்பு தவிடுபொடியாகியுள்ளது; திஸ்ஸ அத்தநாயக்க

 மக்களின் எதிர்ப்பார்ப்பு தவிடுபொடியாகியுள்ளது;  திஸ்ஸ அத்தநாயக்க

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்கின்றது. எனவே, அதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக ஆட்சிக்கு விரோதமான செயற்பாடுகளாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

எம்.பி திஸ்ஸ அத்தநாயக்கவின் ஆன்மிக பயணத்தின் ஒரு அங்கமாக நேற்று நுவரெலியா – வலப்பனை நாராங்தலாவ, மைலகஸ்தென்ன ஸ்ரீ தர்மராஜராமய விகாரையின் விகாராதிபதியை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதேன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமது கருத்துகளை, நிலைப்பாடுகளை சுதந்திரமாக நாடாளுமன்றத்துக்குள் வெளியிடும் உரிமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டும். அந்த உரிமையை பயன்படுத்தி கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்க முற்படுவது, அவருக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பன ஏற்புடைய விடயமாக அமையாது. அவற்றை கண்டிக்க வேண்டும். அதேபோல பாராளுமன்றத்துக்குள் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களானவை ஜனநாயக ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

நிவாரணங்கள் கிடைக்கும், சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த அரசுக்கு மக்கள் வாக்களித்தனர். அந்த எதிர்ப்பார்ப்பு ஒரு வருடத்துக்குள்ளேயே தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று என்ன நடக்கின்றது? நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் சூழலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

க.கிஷாந்தன்

Udayasooriyan Editor

0 Reviews