மத்திய அதிவேக வீதி இன்று முதல் பொது போக்குவரத்து சேவை…

 மத்திய அதிவேக வீதி இன்று முதல் பொது போக்குவரத்து சேவை…

மத்திய அதிவேக வீதியின் மீரிகம தொடக்கம் குருணாகல் வரையான பகுதியில் பொது போக்குவரத்து சேவை இன்று ஆரம்பிக்கப்படுகின்றது.

கொழும்பு தொடக்கம் கண்டி மற்றும் கொழும்பு தொடக்கம் குருணாகல் வரையான பஸ்கள் அதிவேக வீதியில் பயணிக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

எனினும், சொகுசு பஸ்களுக்கு மாத்திரமே அதிவேக வீதியில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து குருணாகல் வரை 390 ரூபா பஸ் கட்டணமாக அறவிடப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பிலிருந்து கண்டி வரை 500 ரூபா பஸ் கட்டணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Udayasooriyan Editor

0 Reviews