மின்சார சபை பொறியியலாளர்கள் சுகயீன விடுமுறை

 மின்சார சபை பொறியியலாளர்கள் சுகயீன விடுமுறை

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் திட்டமிட்டப்படி இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று 10 மணி முதல் இலங்கை மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக அமைதியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பொதுமுகாமையாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Udayasooriyan Editor

0 Reviews