முதல் போட்டியில் 6 விக்கெட்கள்

 முதல் போட்டியில் 6 விக்கெட்கள்

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான காஸிகோ ரபடாவின் பிறந்தநாள் இன்று.

தென்னாபிரிக்காவில் உள்ள ஜொகன்னஸ்பர்க் நகரில், 1995 ஆம் ஆண்டு ரபடா பிறந்தார். ரபடாவின் அப்பா ஒரு வைத்தியர் என்பதால், சிறுவயதில் வசதியான வாழ்க்கையை வாழ்ந்தார்.

சிறுவயது முதலே வேகப்பந்து வீச்சில் ஆர்வம் கொண்டிருந்த அவர், தான் படித்த பாடசாலைக்காகவும், தான் வசித்த பகுதியில் உள்ள ஹைவெல்ட் லயன்ஸ் கிளப்புக்காகவும் பல கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

2014ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்காவுக்காக ஆடிய ரபடா, தனது முதல் போட்டியிலேயே 25 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். இது இத்தொடரிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்க அணி கோப்பையைக் கைப்பற்ற, அந்நாட்டின் முக்கிய பந்துவீச்சாளராக ரபடா உருவெடுத்தார்.

2015ஆம் ஆண்டுமுதல் தென்னாபிரிக்க அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவரும் ரபடா, வங்கதேசத்துக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியிலேயே 16 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி பலரையும் அசரவைத்தார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்துவரும் ரபடா, 45 டெஸ்ட் போட்டிகளில் 202 விக்கெட்களையும், 77 ஒருநாள் போட்டிகளில் 119 விக்கெட்களையும், 26 டி20 போட்டிகளில் 31 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

Udayasooriyan Editor

0 Reviews