வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம், வாரத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே!

 வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம், வாரத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே!

மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திரம் இன்று முதல் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே விநியோகிக்கப்படும் என மேல் மாகாண தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.

அதன்படி, வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணனி அமைப்பு செயலிழந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், மேல் மாகாணத்தில் ஒகஸ்ட் 12, 2021 ஆம் திகதி முதல் டிசம்பர் 31, 2021 ஆம் திகதிவரை காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதம் விதிக்காது சலுகைக் காலத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Udayasooriyan Editor

0 Reviews