வௌ்ளைப்பூண்டு மோசடி; அதிகாரிகள் விளக்கமறியலில்

 வௌ்ளைப்பூண்டு மோசடி; அதிகாரிகள் விளக்கமறியலில்

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சதொச அதிகாரிகள் நால்வரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த 4 சதொச அதிகாரிகள் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கொள்வனவு தொடர்பான உதவி மேலாளர், சிரேஷ்ட விநியோக முகாமையாளர், விநியோக முகாமையாளர் மற்றும் வெலிசர மொத்த விற்பனை முகாமையாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலங்களை வழங்குவதற்காக சந்தேகநபர்கள் நேற்று வந்திருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Udayasooriyan Editor

0 Reviews