அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

 அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

டி 20 உலக கோப்பையில் இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களம் இறங்குவார்கள். அதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரி‌ஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா, ஜடேஜா என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

பந்துவீச்சாளர்கள் சூழலுக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள். இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருக்கும் அணிகளுக்கு எதிராக அஸ்வின் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அவர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவர் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. மற்ற போட்டிகளில் ராகுல் சாகருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல வருண் சக்கரவர்த்தியும் போட்டி களத்தில் இருக்கிறார்.

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பும்ரா, முகமது ‌ஷமி இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் புவனேஸ்வர் குமாரும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Udayasooriyan Editor

0 Reviews