7 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை

 7 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும்  நடிகை

போய் பிரண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஹனிரோஸ். இவர் தமிழில் முதல் கனவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிங்கம்புலி, மல்லுக்கட்டு படங்களில் நடித்தார். கடைசியாக 2014ம் ஆண்டு காத்தவராயன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவர் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடித்துள்ளார். சைக்கோ திரில்லர் கதையான இதில் சுந்தர்.சி போலீஸ் அதிகாரியாகவும், ஹனிரோஸ் பத்திரிகை நிருபராகவும், ஜெய் சைக்கோ கொலைகாரனாகவும் நடித்திருக்கிறார்கள். பத்ரி இயக்கி உள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

Udayasooriyan Editor

0 Reviews