Udayasooriyan Editor

இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2022

மேஷ ராசி அன்பர்களே! தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நண்பர்கள் வகையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். இன்று வாராஹிதேவி வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும். ரிஷப ராசி அன்பர்களே! மனதில் அவ்வப்போது […]Read More

மரம் முறிந்து விழுந்ததில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை கட்டிடம் மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த 9 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிமடை, இந்துக் கல்லூரியில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலைக்கு அருகாமையில் உள்ள காணியில் இருந்த மிகப்பழமையான தென்னை மரமொன்றே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. விபத்து தொடர்பில் வெளிமடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.Read More

நீராடச் சென்ற 16 வயது சிறுவன் பலி

குடும்பத்துடன் நீராடச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுப் பாலத்திற்கு அருகில் இவர்கள் நீராட சென்ற போது நேற்று 14.06.2022 மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய ஹஷான் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். காணாமல் போன சிறுவனை பொலிசார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் தேடி வருகின்றனர். மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். “என் குழந்தை…. புண்ணியம் கிடைக்கும் […]Read More

கொழும்பில் இருந்து கண்டிக்கான சொகுசு ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதார மற்றும் நாளாந்த நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இன்று 15.16.2022 தொடக்கம் புதிய போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ரயில் சேவைகள் குறித்து தெரிவிக்கையில், தற்சமயம் ஆகக்கூடுதலானோர் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றார்கள். இதனால் புதிய திட்டத்தின் கீழ் ஆகக்கூடுதலான ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். கொழும்பில் இருந்து கண்டிக்கான சொகுசு ரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. களனிவெலி ரயில் பாதையில் இன்று […]Read More

100 மணி நேர முயற்சிக்கு பின் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன்

ஜாங்கிரி-ஷம்பா மாவட்டம், பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல், கடந்த 10 ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள பயனற்ற ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உற்பட பல குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் குறிப்பாக ஆழ்துளை கிணற்றின் அருகே மிகப்பெரிய சுரங்கம் தோண்டப்பட்டது ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஒக்சிஜன் அனுப்பப்பட்டது. சிறுவனின் மீர்ரெடுக்க தீவிரமாக நடந்த இந்த மீட்பு பணி 3 […]Read More

சீனாவிடமிருந்து மானியமாக அரிசி இலங்கைக்கு

சீனாவிடமிருந்து மானியமாக 500 மில்லியன் யுவான் பெறுமதியுடைய அரிசி தொகை 6 கட்டங்களாக இலங்கைக்கு வழங்கி வைக்கப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய முதற்கட்ட அரிசி தொகை எதிர்வரும் 25 ஆம் திகதியும், இரண்டாம் கட்டம் 30 ஆம் திகதியும் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன. குறித்த அரிசி தொகையில் 10 000 மெட்ரிக் தொன் அரிசியை பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக உபயோகிப்பதற்கு வழங்கவுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது காணப்படும் உரப்பிரச்சினையால் நெற் […]Read More

இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை: லிட்ரோ

இன்றைய தினமும் சந்தைகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இயலாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 7 நாட்களாக கெரவலப்பிட்டிய கடற்பிராந்தியத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கு, கட்டணம் செலுத்தப்பட்ட போதிலும் கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு எற்பட்டுள்ளதாக லாஃப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கும் எரிவாயு சிலிண்டர்களின் அளவை கூற முடியாதுள்ளதாக […]Read More

நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும்; கெமுனு விஜேரத்ன

  போதியளவு டீசல் கிடைக்காவிட்டால், நாளை மறுதினம் முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டீசல் இன்மையால், இன்றைய தினம் சேவையில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கையை 20 சதவீதமாக மட்டுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில், இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போக்கள் மூலம், தனியார் பஸ்களுக்கு டீசலை விநியோகிப்பதும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.Read More

மருந்து தட்டுப்பாட்டுக்கு 6 வாரங்களுக்குள் தீர்வு

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் 6 வாரங்களுக்குள் முழுமையாக நிவர்த்தி செய்ய முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மருந்துகளை கொண்டுவருவதற்கு தேவையான நிதி கிடைத்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசியமான 14 மருந்து வகைகள் தேவையான அளவு கையிருப்பிலுள்ளது. அத்தோடு 186 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றை விரைவில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.Read More

தலவாக்கலையில் மரம் விழுந்து ஒருவர் பலி

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை மணிமாறன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹேலீஸ் பிளான்டேசன் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டும் பணிகள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றன . குறித்த தொழிலாளியும் மற்றொரு தொழிலாளியும் நேற்றைய தினம் தோட்டத்தில் பள்ளத்தாக்கு […]Read More