ஜாங்கிரி-ஷம்பா மாவட்டம், பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல், கடந்த 10 ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள பயனற்ற ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உற்பட பல குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் குறிப்பாக ஆழ்துளை கிணற்றின் அருகே மிகப்பெரிய சுரங்கம் தோண்டப்பட்டது ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஒக்சிஜன் அனுப்பப்பட்டது. சிறுவனின் மீர்ரெடுக்க தீவிரமாக நடந்த இந்த மீட்பு பணி 3 […]Read More
Feature post

குழந்தை ஒன்றை கடத்தியதாக சமூக ஊடகத்தில் வதந்தி பரவியதை அடுத்து மெக்சிகோ நாட்டு அரசியல் ஆலோசகர் ஒருவர் கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மத்திய மாநிலமான புவெப்லாவில் 31 வயதான டேனியல் பிகாசோ, சுமார் 200 பேர் கொண்ட கூட்டத்தால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பபட்லசோகோ நகருக்கு வந்த அவரை சுற்றிவளைத்திருக்கும் கும்பல் அவரை கொலை செய்த பின் உள்ளூர் பயிர் நிலம் ஒன்றுக்கு இழுத்துச் சென்று அவரது உடலுக்கு தீ வைத்துள்ளது. இது ஒரு காட்டு மிராண்டிச் […]Read More
தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்த குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற 24 வயது இளம் பெண் திருமணம் நேற்று நடைபெற்றது. சமீபத்தில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஷாமா பிந்து அறிவித்தார். இதற்கு முன்பு இதுபோன்ற திருமணத்தை யாராவது செய்திருக்கிறார்களா என்று இணையத்தில் தேடிப் பார்த்து அவ்வாறு யாரும் செய்துகொள்ளவில்லை என்பதையும் அவர் அறிந்து கொண்டார். அதன் பிறகு அவர் தனது திருமணத்தை செய்ய விரும்பினார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் […]Read More
பீகார் மாநிலத்தில் இறந்து போன மகனின் உடலை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனை பணம் கேட்டதால் பிச்சை எடுக்கும் தந்தையின் அதிர்ச்சி காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமஸ்டிபூரைச் சேர்ந்தவர் மகேஷ் தாக்குர். இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்பட்டது. இந்நிலையில், சதார் அரசு மருத்துவமனையில் மகனின் உடல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடலை வாங்க தனது மனைவியுடன் அவர் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் உடலை தர வேண்டுமானால் 50 […]Read More
மனிதனை பிரமிப்பில் ஆழ்த்த இயற்கை என்றும் தவறியதே இல்லை. கதைகளிலும், கற்பனைகளிலும், திகில் திரைப்படங்களிலும் மரங்கள் இரத்தம் சிந்துவதை கண்டிருப்போம். அமானுஷ்யமான நிகழ்வாக பலரும் இதை கருதி வந்த நிலையில், உண்மையிலேயே வெட்டினால் இரத்தம் சிந்தும் மரம் உள்ளது அறியப்பட்டுள்ளது. தனித்துவமான இந்த மரத்தின் பெயர் டிராகன் பிளட் (Dragon Blood Tree). சகோடா தீவில் காணப்படும் இந்த மரம் மற்ற மரங்களை போல அல்லாமல், குறைந்த அளவு நீரையே வளர எடுத்துக் கொள்கிறது. வெப்பான சூழலிலும் […]Read More
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இந்திய உணவகம் ஒன்றில் தமிழில் ‘ஓடர்’ கொடுத்ததால் நெகிழ்ந்துபோன உரிமையாளர், அவருக்கு இலவசமாக உணவு வழங்கியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவில், ஸியோமா என்பவர் உணவுகளை ருசித்து, அதை ‘யூடியூப்’ வலைதளத்தில் பதிவேற்றி வருகிறார். இவர், சமீபத்தில் நியூயோர்க்கில் உள்ள ஒரு இந்திய உணவகத்திற்குச் சென்று தமிழில் உணவுகளின் பெயரைக் குறிப்பிட்டு எடுத்து வரச் சொல்லியுள்ளார். அமெரிக்கர் ஒருவர் தமிழில் பேசி உணவு கேட்டதால் நெகிழ்ச்சி அடைந்த உணவக உரிமையாளர், […]Read More
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரம் உள்ளிட்ட நான்கு மலைகளிலிருந்து 34 தொன் கழிவுகள் அகற்றப்பட்டதாக நேபாள ராணுவம் திங்கள்கிழமை தெரிவித்தது. நேபாள ராணுவத்தைச் சோ்ந்த குழுவினா் தலைமையிலான ஒரு குழு மலைச் சிகரங்களில் தூய்மைப் பணியை கடந்த ஏப். 5-ஆம் திகதி தொடங்கியது. 30 ராணுவத்தினா், மலையேற்ற வழிகாட்டிகள் 48 போ், 4 மருத்துவா்கள் உள்ளிட்ட 82 போ் இதில் இடம்பெற்றிருந்தனா். உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ஆம் திகதி இந்தப் பணி நிறைவடைந்தது. […]Read More
ஹரியானாவில் முதல் முறையாக நாய்கள் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் பாதித்து வருகிறது. இந்நிலையில், கிஸாசர்சா, அரோதக், பதோபாபத் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50 நாய்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் 15 நாய்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட நாய்கள் வாந்தி, ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு பலவீனமாகி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே வயிற்றுப்போக்கால் அவதிப்படும் நாய்களை உடனடியாக […]Read More
உக்ரைன் மீதான போர் தீவிரமடைந்துவரும் சூழலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் இரகசியக் காதலி எனச் சொல்லப்படும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவைக் கெளரவிக்கும் ஜிம்னாஸ்டிக் விழாவை அவர் நடத்தியுள்ளது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. அலினா கபேவாவைக் கௌரவிக்கும் வகையில் ரஷ்யா ‘அலினா விழா’ என்ற விழாவை நடத்தியது, புதின் கலந்துகொண்ட இவ்விழா கடந்த மாதம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தைக் குறிக்கும் வகையில் ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சி ஜூன் 1ஆம் திகதி இந்த விழாவினை […]Read More
நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் நிகழும்போது மக்கள் இருப்பிடத்தை அறிய ஸ்கொட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் எலிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். நிலநடுக்கம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களாலும், தொழில்நுட்ப தவறுகளாலும் கட்டிடங்கள், குடியிருப்புகள் இடிந்து விடும் சம்பவங்கள் அனைத்து நாடுகளில் நடந்து வருகின்றன. இவ்வாறு கட்டிடங்கள் இடியும்போது மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது மீட்பு குழுவுக்கு சவாலான காரியமாக இருந்து வருகிறது. முக்கியமாக இடிபாடுகளில் எந்த இடத்தில் அவர்கள் சிக்கியுள்ளனர் என்பதை அறிவது பெரும் சிரமமாக […]Read More









