இரத்மலானையில் உள்ள மலிபன் பிஸ்கட் தொழிற்சாலையில் பலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் அதனை தனிமைப்படுத்தியுள்ளனர். கொவிட்19 குறித்த தேசிய செயலணி இதனை உறுதி செய்துள்ளது. பிஸ்கட் தொழிற்சாலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சரியாக தெரிவிக்க முடியாதநிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அதிகாரிகள் தொழிற்சாலையில் பிசிஆர் சோதனைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளனர். இரத்மலானையில் உள்ள தலைமையகமும் தொழிற்சாலையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Read More
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. தங்கொடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கொவிட் தொற்றுடன் நியுமோனியா அதிகரித்த காரணத்தால் உயிரிந்துள்ளான். மேலும், கொழும்பு 07 பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் நியுமோனியா ஏற்பட்ட […]Read More
நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த 68 வயதான ஆண் கைதி ஒருவர், கடந்த 17 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா காரணமாக அவர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பு – 15 பகுதியை சேர்ந்த 55 வயதான ஆண் ஒருவர், கடந்த 19 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் சிறுநீரக செயலிழப்பு என்பன அவரது மரணத்திற்கு […]Read More
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தரம் 1 தொடக்கம் 5 வரையான ஆரம்பப் பிாிவுகள் எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.Read More
கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 05 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பலங்கொடை பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆண் ஒரு வர், கொழும்பு 08ஐச் சேர்ந்த 52 வயதான ஆண் ஒருவர், கொ ழும்பு 12ஐச் சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர், கொழும்பு 02ஐச் சேர்ந்த 44 வயதான ஆண் ஒருவர், […]Read More
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய இதுவரை நாட்டில் 176 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும், பனாகொட பிரசேத்தை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 08 பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பண்டாரகம […]Read More
கொழும்பு, லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஜீ. விஜேயசூரிய தெரிவித்துள்ளார். இதுவரை 70 சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தினமும் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வரும் சிறுவர்களில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தற்செயலாக மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் போது தினமும் ஐந்துக்கு குறையாத நபர்கள் வைரஸ் தொற்றாளர்களாக […]Read More
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 […]Read More
கம்பஹா மாவட்டத்தில் இன்று காலை 5.00 மணிமுதல் மேலும் மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி வேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை கொழும்பு மாவட்டம் 01. இன்று காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள் • வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் சாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு • வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி 02. தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள் • மோதர […]Read More
ஜனவரி மாதத்தில் நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். இதன்காரணமாக முதியோர் இல்லங்களை உரியமுறையில் நிர்வகிக்கவேண்டும். இதன் மூலம் முதியோர் இல்லங்களில் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.Read More









