கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஐந்து ஊழியர்களுக்கு COVID-19 தோற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இலங்கை துறைமுக ஆணையத்தின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க கூறுகையில், கொழும்பு கப்பல்துறை ஒரு சுயாதீன நிறுவனம், இது கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் அமைந்துள்ளது, இது கப்பல் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளது மற்றும் துறைமுகத்தின் செயல்பாடுகள் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்படாது என்றார் சுமார் 1,500-2,000 ஊழியர்கள் கொழும்பு கப்பல்துறை வளாகத்தில் பணிபுரிகின்றனர் என்று கூறிய அவர், துறைமுக ஊழியர்களுடனான சந்திப்புகளை வளாகத்திற்குள் உள்ள பொது […]Read More
மினுவங்கொடை கொத்தணியில் மேலும் 42 பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலில் இருந்த 22 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.Read More
மினுவங்கொடை கொத்தணியில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலில் இருந்த 2 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 71 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,427ஆக உயர்ந்துள்ளது.Read More
தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களத்தின் கீழுள்ள அனைத்து மிருகக்காட்சிசாலைகளையும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்னாயக தெரிவித்துள்ளார்.Read More
இலங்கை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன. அவருக்கு இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லையென தெரியவந்துள்ளது. குறித்த ஊழியர் பலாங்கொட பகுதியைச் சேர்ந்தவர், கொழும்பில் வசிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. காவியன்Read More
தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் போது மாணவர் ஒருவருக்கு பதில்களை எழுதுவதற்கு மோசடியாக உதவி செய்த குற்றச்சாட்டில் பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை மாவட்டம், வாத்துவ பகுதி பரீட்சை நிலைய மேற்பார்வையாளரே நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மேற்பார்வையாளர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். காவியன்Read More
நாட்டில் நேற்றைய தினம் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை கொத்தணியில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தலில் இருந்த 38 பேருக்கும் அவர்களுடன் தொடர்புடைய 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,899 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழிற்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா […]Read More
கொரோனா தொற்று பரவலையடுத்து பாடசாலைக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், பிரத்தியேக வகுப்புக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை ஆரம்பமாகும் (17 ம் திகதி) நவராத்திரி விழா தொடர்பான பூஜைகளோ, விழாக்களோ, கலந்துரையாடல்களோ பாடசாலைகளில் நடத்த வேண்டாம் என மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய, மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் திருமதி ஏ.ஆர்.சத்தியேந்திரா அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். காவியன்Read More
மினுவாங்கொடை ஆடைதொழிற்சாலையின் கொரோனா கொத்தணியில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 35 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் , 14 பேர் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் பழகியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர் மொத்த எண்ணிக்கை 1899ஆக உயர்ந்துள்ளது காவியன்Read More
வயிற்று வலி காரணமாக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலன்னறுவை அரலகங்வில பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கே கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொலன்நறுவை வைத்தியசாலையின் 22 ஆம் இலக்க விடுதிக்கு நோயாளர்களை அனுமதிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.Read More









