நாட்டில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலையும் மேலும் உயர்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு, கோழி தீவனத்தின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு முட்டையின் உற்பத்தி செலவு மாத்திரம் 31 ரூபாயாக அதிகரித்துள்ளது. கோழித் தீவன விலை உயர்வால் சிறு கோழி […]Read More
மஹியங்கனை தம்பராவ குளத்தில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 45 வயதான தந்தை மற்றும் 15,10 வயது இரு மகன்கள் ஆவர். ஹபரவெவ, கிரிமெடில்ல பிரதேசத்தில் வசிக்கும் இவர்கள் நேற்று பிற்பகல் தம்பராவ குளத்தில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர். அவர்கள் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடி பார்த்ததில் அவர்கள் குளிப்பதற்கு சென்ற இடத்தில் உடைகள் மற்றும் காலணிகள் மட்டும் காணப்பட்டுள்ளது. பின்னர் பிரதேசவாசிகள் நீரில் மூழ்கியவர்களை மீட்டு மஹியங்கனை வைத்தியசாலைக்கு […]Read More
நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் இந்த நிலைக்குச் செல்லத் தமது கடமைகளை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட பாராளுமன்றக் குழுவொன்றை அமைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் (கோப் குழு) பேராசிரியர் சரித ஹேரத் பரிந்துரைத்தார். பொருளாதாரத்தை வழிநடத்திய ஒரு சிலரின் தீர்மானங்கள் காரணமாக முழு நாடும் இன்று பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், இதனைக் குற்றமாகக் கருதி விரைவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோப் […]Read More
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்று 25.05.2022 இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாடொன்றில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாங்கள் அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பின் எமக்கு எதிராக கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பான எந்த அறிவித்தலும் எமக்கு கிடைக்கவில்லை. நாம் ஏன் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம் என்பதில் தொடர்பில் […]Read More
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் குறைந்தளவான கொடுப்பனவை ஏற்றுக்கொள்ள முடியாது.எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையினை ஏற்படுத்தியுள்ளது. எனவே வழங்குவதற்கு தீர்மானித்துள்ள கொடுப்பனவில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். அதேநேரம், பரீட்சை நிறைவுறும் வரையில் எரிபொருள் விலையை அதிகரிக்காதிருப்பதுடன், பரீட்சார்த்திகள் மற்றும் பணிக்குழாமினருக்கு எரிபொருள் தடையின்றி […]Read More
அரசாங்கம் ஆறு வார காலங்களுக்குள் இடைக்கால வரவுசெலவுத் திட்டமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கிணங்க அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவுசெலவுத் திட்டம் நிவாரணங்களை வழங்கும் வரவுசெலவுத் திட்டமாக அமையுமென்றும் அத்துடன் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது இரண்டு வருடங்களுக்கு நிவாரண வேலைத்திட்டத்திற்காக செலவிடப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். சாத்தியமற்ற பொருளாதார முகாமைத்துவம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வுகாணப்பட்டு நாட்டை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளவேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் […]Read More
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் மூலம் அதனுடனான செயற்திட்டம் வெற்றியளிக்குமேயானால், அடுத்த வருடமளவில் நாட்டின் பொருளாதாரம் மீட்சியடையும் என்று எதிர்பார்க்க முடியும் என தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இருப்பினும் பணவீக்கமானது 30 – 40 சதவீதமாகவே தொடர்ந்து காணப்படும். அதனை மத்திய வங்கியினால் குறைக்கமுடியாது.எனவே இதன் விளைவாக வறியவர்கள் வெகுவாகப் பாதிப்படைய நேரும் என்பதுடன், மேலும் பலர் வறுமைக்குத் தள்ளப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார். நாடு கடன்களை மீளச்செலுத்த முடியாமல் மிகமோசமாக […]Read More
பொதுச் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக அத்தியாவசியமான குறைந்தபட்ச உத்தியோகத்தர்களை மாத்திரம் இன்று முதல் பணிக்கு அழைப்பதற்கான சுற்றறிக்கையொன்றை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாணங்களுக்குப் பொறுப்பான செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் கையொப்பமிடப்பட்ட குறித்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்த சுற்றறிக்கை தடையாக இருக்கக்கூடாதென அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் […]Read More
எரிவாயு சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்யவோ அல்லது கொள்வனவு செய்யவோ வேண்டாம்;
இன்று மற்றும் நாளைய தினங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்தப்பட்டுள்ள 2 எரிவாயு கப்பல்களை நாட்டை அண்மித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதில் ஒரு கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதுடன், மற்றுமொரு கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது. குறித்த இரு கப்பல்களிலும் 7,500 மெட்ரிக் தொன் எரிவாயு காணப்படுகிறது. முதலாவது கப்பல் நாளை நாட்டை வந்தடைந்தவுடன், நாளை மறுதினம் முதல் சமையல் […]Read More
சிறு போகத்திற்கு தேவையான நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களுக்குள் செய்கை நடவடிக்கைகள் நிறைவுபெறாவிடின், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தற்போது நெற்செய்கையை செய்ய முடியாது போனால் மாற்றுப் பயிர்களை பயிரிடுமாறு அவர் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.Read More









