கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்கு எதிராக பெண் தொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது . போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (37) மீது கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் மயார்கோ என்ற பெண் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரில், 2009ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் நகருக்கு வந்திருந்த ரொனால்டோ ஹோட்டல் அறையில் தன்னை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார். […]Read More
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. எஞ்சிய போட்டிகள் ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை, தற்போது நடைபெற்று வரும் இருபதுக்கு 20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது. இறுதி இருபதுக்கு 20 போட்டி நாளை (11) கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தசுன் ஷானக (தலைவர்), […]Read More
நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியுசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி கடந்த கடந்த ஜூன் 2ஆம் திகதி முதல் ஜூன் 06ஆம் திகதி வரை நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே காயம் […]Read More
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள எமது சக இலங்கையர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான மிட்செல் ஸ்டாக் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உலக சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதிகள் குழு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிதி திரட்டும் பிரசாரத்திற்கு ஆதரவளிக்குமாறு உலகெங்கிலும் உள்ள தமது ரசிகர்களை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிதி திரட்டும் பிரசாரம் ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் எதிர்வரும் செப்டம்பர் […]Read More
பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய அணித்தலைவராக சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து மொமினுல் ஹக் விலகினார். பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ஷகிப் அல் ஹசனும், துணைத் தலைவராக லிட்டன் தாஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். 35 வயதான ஷகிப் அல் ஹசன், இதற்கு முன்னர் பல தடவைகள் பங்களாதேஷ் டெஸ்ட் […]Read More
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சென்னையில் இருக்கும் தனது ரசிகைக்காக செய்த காரியம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு ஆட்டம் அமையவில்லை. இந்நிலையில், ஐபிஎல் போட்டி முடிந்துள்ள நிலையில் தோனி சென்னையில் திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தோனி சென்னையில் தனது ரசிகையை நேரடியாக சென்று அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த ரசிகை லாவண்யா, […]Read More
டி20 கிரிக்கெட் என்றால் சிக்ஸர்கள் அதிகமாக அடித்தால் தான் வெற்றி நிச்சயம் என்றொரு கருத்து உண்டு. இதனால் தான் மேற்கிந்திய வீரர்களைத் தேர்வு செய்ய ஐபிஎல் ஏலத்தில் அதிகப் போட்டி இருக்கும். ஆனால் ஐபிஎல் 2022 போட்டியில் குறைந்த சிக்ஸர்களை அடித்த அணி என்றால் அது குஜராத் தான். ஆம். லீக் சுற்றுகளின் முடிவில் முதல் இடத்தைப் பிடித்த குஜராத் தான் இதர அணிகளை விடவும் குறைந்த சிக்ஸர்களை அடித்துள்ளது. பந்துவீச்சிலும் சூழலுக்கு ஏற்றாற்போல் ரன்கள் எடுப்பதிலும் […]Read More
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு நேரடியாக முன்னேறும் அணி எது என்பதை தீர்மானிக்கப்போகும் குஜராத் – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஐபிஎல் லீக் சுற்றின் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதில் இன்று நடக்கும் முதல் ‘தகுதிச் சுற்று’ (Qualifier 1) ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள […]Read More
பங்கேற்ற 75 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காத குத்துச்சண்டை வீரர்! களத்திலேயே பிரிந்த உயிர்
இதுவரை கலந்துகொண்ட 75 குத்துச் சண்டைப் போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத ஜேர்மனியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் மூசா யாமக் குத்துச்சண்டைக் களத்திலேயே மரணித்தார். ஜேர்மனியைச் சேர்ந்த 38 வயதான மூசா அஸ்கன் யாமக், இதுவரை தான் கலந்துகொண்ட 75 குத்துச்சண்டைப் போட்டிகளில் தோல்வியையே சந்தித்ததில்லை. மேலும், 2019இல் துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன் குத்துச்சண்டைப் போட்டியில் சாம்பியன் பதக்கம் மற்றும் ஆசிய சாம்பியன் பட்டங்களை வென்றவர். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை ஜேர்மனியில் உள்ள […]Read More
கொரோனா பரவல் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு சீனாவில் செப்டெம்பர் 10 முதல் 25ஆம் திகதி வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற இருந்தன சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்புRead More









