இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சால் வருடாந்தம் நடத்தாப்படும் தேசிய விளையாட்டு விழா இம்முறை கதிர்காமத்தில் நடைப்பெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஒக்டோபர் 10 மற்றும் 11 ம் திகதிகளில் கதிர்காமத்தில் இடம்பெற இருந்து மரதன், சைக்கிள் ஓட்டம் உட்பட அனைத்து விளையாட்டுக்களையும், கொரோனா தொற்று சிக்கல் காரணமாக கால வரையின்றி ஒத்திவைப்பதாகவும், இவ் விளையாட்டுக்கள் இடம் பெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் அமல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். காவியன்Read More
ஐ.பி.எல். 2020 சீசன் கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சென்னை வெற்றி பெற்றது. 2ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி வெற்றி பெற்றது. 3ஆவது ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது 4ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் […]Read More
நம்ம ஊரு ‘சிங்கப்பெண்கள்’ போடைஸ் மகளிர் கால்பந்தாட்டக் குழு
ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ச்சியாக எட்டு தடவைகள் மகளிர் கால்பந்தாட்டத்தில் மாவட்ட மட்ட சாம்பியன்களாக வெற்றியை கைப்பற்றி அசைக்க முடியாத அணியாக உருவாகியிருக்கிறார்கள் டிக்கோயா போடைஸ் உதைபந்தாட்ட மகளிர் அணியினர். மலையகத்தைப் பொறுத்தவரை விளையாட்டுத்துறையில் பெண்களின் வெற்றியும் சாதனைகளும் இன்றும் சவாலுக் குரியதாகவே இருக்கிறது. பாடசாலை காலத்தில் விளையாட்டுத்துறையில் பல வெற்றித்தடங்களை பதித்த மாணவிகள் பாடசாலை காலத்தின் பின் விளையாட்டுத் துறையை தொடர்வதும் அணியாக இயங்குவதும் அாதாரணமானது. ஆனால் பாடசாலை காலத்தில் இணைந்த போடைஸ் மகளிர் அணியினர் இன்றும் […]Read More
ஐ.பி.எல். போட்டிகளில் எந்த அளவுக்கு பணம் கிடைக்கிறது. ஏன் ஐபிஎல் போட்டிகளை கொரோனா காலத்திலும் நடத்துவதில் பிசிசிஐ உறுதியாக இருக்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி. அது ஏன் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். விராட் கோலியின் கவர் ட்ரைவ், மகேந்திர சிங் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், பும்ராவின் அதிவேகம், ரோஹித் சர்மாவின் அதிரடி, கிறிஸ் கெய்லின் காட்டடி. அற்புதமான கேட்ச்கள், துல்லியமான ரன் அவுட், கொஞ்சம் கிரிக்கெட் மோகம், நிறையப் பொழுதுபோக்கு இவை அனைத்தும் பணமாக மாறி கொட்டும் […]Read More
13ஆவது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம்(19) ஆரம்பமாகி நவம்பர் மாதம்10ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள டுபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த சீசனுக்கான ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போகும் அணி யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே கோப்பையை வென்ற அணி சாம்பியன் ஆகுமா? அல்லது புதிய அணி பட்டம் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிடல்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகள் […]Read More
பிரதேச சபைகளுக்கிடையில் மாவட்ட மட்டத்திலான வலைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை நுவரெலியா சின்சிட்டா மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் அம்பகமுவ பிரதேச சபையை சேர்ந்த ஸ்கோபியன் கழகத்தின் நண்பன் அணியும் வலப்பனை பிரதேச சபையை சேர்ந்த அணியும் மோதின. இதில் 3:2 என்ற கணக்கில் அம்கமுவ பிரதேச சபை நண்பன் அணி வெற்றி பெற்று மாகண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது. பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்Read More
ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கான புதிய சாதனையை யுபுன் அபேயகோன் நிலைநாட்டியுள்ளார். 8ஆம் திகதி இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் குறித்த தூரத்தை10 தசம் ஒன்று – ஆறு வினாடிகளில் பூர்த்தி செய்து இந்தச் சாதனையை புரிந்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதணை ஹிமாஷ ஏஷான் வசமிருந்தது. அவர் 100 மீற்றர் தூரத்தை 10 தசம் இரண்டு – இரண்டு வினாடிகளில் பூரணப்படுத்தியிருந்தார். யுபுன் அபேயகோன இத்தாலியில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார். […]Read More
மாவட்ட மட்ட போட்டிகளுக்குத் தெரிவானது ஓல்டன் சாமிமலை குளோரியஸ் அணி
அம்பகமுவ இளைஞர் கழக சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டிகள் நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் பொகவந்தலாவ நோத்கோவ் தோட்ட நியூ சிக்ஸஸ் அணி ஓல்டன் சாமிமலை குளோரியஸ் அணியை எதிர்த்து ஆடி முதலாம் இடத்தை பெற்று மாவட்ட மட்ட போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளது.Read More
தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் பிரதேச மட்ட விளையாட்டு போட்டிகள் தற்போது நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அம்பகமுவ பிரதேச மட்ட உதைப்பந்தாட்ட சுற்று போட்டி நோர்வூட் தொண்டமா் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் இறுதி சுற்றுக்கு தெரிவாகி 2-1 என்ற கோல் கணக்கில் இரண்டாம் இடத்தை போடைஸ் இளைஞர் கழக உதைப்பந்தாட்ட அணி பெற்றுக்கொண்டது.Read More
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் அண்டர்சன். 38 வயதான அவர் சமீபத்தில் டெஸ்டில் 600 விக்கெட் கைப்பற்றி சாதனை புரிந்தார். டெஸ்டில் 600 விக்கெட் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அண்டர்சன் படைத்தார். இந்த நிலையில் அண்டர்சனின் 600 விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் எம்.சி.சி. தலைவருமான சங்கக்கார தெரிவித்துள்ளார். மேலும், தற்போது மட்டுமல்ல எதிர் காலத்திலும் வேகப்பந்து வீரர்கள் யாரும் அண்டர்சனின் […]Read More









