சீனாவிடமிருந்து மானியமாக 500 மில்லியன் யுவான் பெறுமதியுடைய அரிசி தொகை 6 கட்டங்களாக இலங்கைக்கு வழங்கி வைக்கப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய முதற்கட்ட அரிசி தொகை எதிர்வரும் 25 ஆம் திகதியும், இரண்டாம் கட்டம் 30 ஆம் திகதியும் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன. குறித்த அரிசி தொகையில் 10 000 மெட்ரிக் தொன் அரிசியை பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக உபயோகிப்பதற்கு வழங்கவுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது காணப்படும் உரப்பிரச்சினையால் நெற் […]Read More
Tags : breaking news
இன்றைய தினமும் சந்தைகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இயலாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 7 நாட்களாக கெரவலப்பிட்டிய கடற்பிராந்தியத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கு, கட்டணம் செலுத்தப்பட்ட போதிலும் கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு எற்பட்டுள்ளதாக லாஃப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கும் எரிவாயு சிலிண்டர்களின் அளவை கூற முடியாதுள்ளதாக […]Read More
போதியளவு டீசல் கிடைக்காவிட்டால், நாளை மறுதினம் முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டீசல் இன்மையால், இன்றைய தினம் சேவையில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கையை 20 சதவீதமாக மட்டுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில், இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போக்கள் மூலம், தனியார் பஸ்களுக்கு டீசலை விநியோகிப்பதும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.Read More
நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் 6 வாரங்களுக்குள் முழுமையாக நிவர்த்தி செய்ய முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மருந்துகளை கொண்டுவருவதற்கு தேவையான நிதி கிடைத்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசியமான 14 மருந்து வகைகள் தேவையான அளவு கையிருப்பிலுள்ளது. அத்தோடு 186 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றை விரைவில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.Read More
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (14) பதற்றமான சூழல் நிலவியது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவசர சேவைகளுக்கு மாத்திரம் என வைக்கப்பட்டிருந்த பெற்றோல் தனியார் ஒருவருக்கு முறையின்றி வழங்கப்பட்டதாக தெரிவித்து அங்கு கூடிய மக்கள் எரிபொருள் நிலைய ஊழியர்களுடன் முரண்பட்டனர். முச்சக்கர வண்டியினுள் கேன்களை வைத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பெற்றோல் வழங்கப்பட்டதாகவும் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றோல் வழங்குவதால் வரிசையில் காத்திருப்போர் பெற்றோல் கிடைக்காமல் ஏமாற்றமடைவதாகவும் அங்கு கூடிய மக்கள் தெரிவித்தனர். இதன் போது […]Read More
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் தொன் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு இன்று முதல் நடவடிக்கை எடுப்பதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய சதொச, கூட்டுறவு நிலையங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் ஊடாக நிவாரண விலையில் அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிவப்பு மற்றும் வெள்ளை கெக்குலு அரிசி ஒரு கிலோகிராம் 197 ரூபாவுக்கும், நாடு ஒரு கிலோ 199 ரூபாவுக்கும், சம்பா 205 ரூபாவுக்கும், கீரி சம்பா 215 […]Read More
மே 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட களேபரத்தை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதை தொடர்ந்து கடந்த ஜூன் 9ஆம் திகதி முன்னாள் நிதி அமைச்சரான பஷில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். இந்த நிலையில், ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த இன்னுமொரு ராஜபக்சவும் விரைவில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜபக்ச குடும்பத்தின் மிக மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சரும் தற்போதைய […]Read More
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒக்டோபர் மாதம் வரை இலங்கைக்கு கடன் கிடைக்க வாய்ப்பில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏனைய நட்பு நாடுகளிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது தவறான நிர்வாகம், வரி குறைப்பு மற்றும் உரப்பிரச்சினை போன்றவற்றின் காரணமாக ஏற்பட்டது. இருப்பினும் கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா – உக்ரேன் யுத்தம் காரணமாக இந்நிலைமை மிக மோசமடைந்தது. தற்போது ஏற்பட்டுள்ள […]Read More
பாடசாலை நாட்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டாலும் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சிறந்த அளவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பதற்கு, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைத்திருந்தது. இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சர் பதிலளிக்கையிலேயே […]Read More
இந்தியாவிடமிருந்து கடன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டு வந்த எரிபொருளில், கடைசி எரிபொருள் தாங்கிய டீசல் கப்பல் இம்மாதம் 16ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. இதன் பின் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் எரிபொருள் உதவி பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை இந்தியாவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதே நேரம், நாட்டில் எரிபொருள் நெருக்கடி நாளை முதல் மோசமடையுமென பெற்றோலிய தொழிற்சங்கங்கள் கருத்துக்களை முன் […]Read More