இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2022

 இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2022

மேஷ ராசி அன்பர்களே!
தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நண்பர்கள் வகையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். இன்று வாராஹிதேவி வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!
மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. பிள்ளைகள் வழியில் வீண்செலவுகள் ஏற்படும். வியாபாரத் தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். மகாவிஷ்ணுவை வழிபட சிரமங்கள் குறையும்.

மிதுன ராசி அன்பர்களே!
இன்று எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும். சிலருக்கு தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அலைச்சலையும் செலவுகளையும் ஏற்படுத்தினாலும் முடிந்துவிடும். தாய்வழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நீண்டநாள் நிலுவையில் இருந்த பாக்கி வசூலாக வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் விநாயகரை தியானித்து வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி அன்பர்களே!
இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச் சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மனதில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறனும் அதிக ரிக்கும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். பழைய கடனைத் திருப்பித் தரும் வாய்ப்பு ஏற்படும். கொடுத்த கடனும் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இன்று நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!
தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் கிடைக் கும் தகவல் மகிழ்ச்சி தரும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று கவனமாக இருக்கவும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். இன்று துர்கையை வழிபட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!
தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் சிவபெரு மானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

துலா ராசி அன்பர்களே!
உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளை களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது உங்களை உற்சாகப்படுத்தும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் பைரவரை வழிபாடு செய்வது நன்று.

விருச்சிக ராசி அன்பர்களே!
காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நண் பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உறவினர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற் பட்டு நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். இன்று முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். தாய்வழி உறவினர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரம் ஓரளவுக்கு லாபம் தரு வதாக இருக்கும். இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

மகர ராசி அன்பர்களே!
செயல்களில் திட்டமிடுதல் மிகவும் அவசியம். அதேபோல் கடன்கள் விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு தந்தைவழி உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று நீங்கள் அம்பிகையை வழிபடுவது நலம் சேர்க்கும்.

கும்ப ராசி அன்பர்களே!
எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டா கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். வியாபாரத்தில் சிறு சிறு பிரச்னைகளை சமாளிக்கவேண்டி வரும். அம்பிகையை தியானித்து வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

மீன ராசி அன்பர்களே!
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக் கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டிவரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறு மையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். இன்று நீங்கள் விநாயகரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

Udayasooriyan Editor

0 Reviews