இறந்து போன மகனின் உடலை வாங்கி செல்ல பிச்சை எடுத்த தந்தை…

 இறந்து போன மகனின் உடலை வாங்கி செல்ல பிச்சை எடுத்த தந்தை…

பீகார் மாநிலத்தில் இறந்து போன மகனின் உடலை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனை பணம் கேட்டதால் பிச்சை எடுக்கும் தந்தையின் அதிர்ச்சி காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமஸ்டிபூரைச் சேர்ந்தவர் மகேஷ் தாக்குர். இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சதார் அரசு மருத்துவமனையில் மகனின் உடல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உடலை வாங்க தனது மனைவியுடன் அவர் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் உடலை தர வேண்டுமானால் 50 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் வேதனையடைந்த தம்பதி இலஞ்சம் கொடுக்க தெரு தெருவாக பிச்சை எடுத்துள்ளனர். இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Udayasooriyan Editor

0 Reviews