ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

 ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு போட்டிகள் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. எஞ்சிய போட்டிகள் ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, தற்போது நடைபெற்று வரும் இருபதுக்கு 20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது. இறுதி இருபதுக்கு 20 போட்டி நாளை (11) கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தசுன் ஷானக (தலைவர்), பெத்தும நிசங்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, அசித்த பெர்னாண்டோ, நுவன் துஷார, ரமேஷ் மெண்டிஸ், மகேஷ் தீக்ஷன, பிரவீன் ஜெயவிக்ரம, ஜெஃப்ரி வொண்டஸே, லஹிரு மதுசங்க, துனித் வெல்லாலகே, பிரமோத் மதுஷான் ஆகியோர் ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Udayasooriyan Editor

0 Reviews