சாய் பல்லவியின், அடுத்த ஆட்டம்

 சாய் பல்லவியின், அடுத்த ஆட்டம்

தமிழக நடிகையாக இருந்த போதும், தெலுங்கு தேசத்தில்தான் கொடிகட்டி பறக்கிறார், சாய்பல்லவி. இந்நிலையில், சில ஆண்டு இடைவெளிக்குப் பின், தற்போது தமிழில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தனுஷ் நடித்த, “மாரி 2” படத்தில் இடம்பெற்ற, ரவுடி பேபி பாடல் மிகப்பெரிய, ‘ஹிட்’ அடித்ததால், இந்த படத்திலும் அது போன்ற குத்து பாடலை தனக்குக் கொடுக்குமாறு இயக்குனரை கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு, அந்த பாடலில் குச்சிப்புடி, பரதநாட்டியம், பாலே மற்றும் கதகளி என, பல நடன அசைவுகளையும் கலந்துகட்டி அடிப்பதற்கும் தயாராக இருப்பதாக கூறுகிறார்.

Udayasooriyan Editor

0 Reviews