தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொதி மக்களுக்கு வழங்கி வைப்பு

 தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட  நிவாரண பொதி மக்களுக்கு வழங்கி வைப்பு

(க.கிஷாந்தன்)

தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொதி மக்களுக்கு வழங்கி வைப்பு தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் உள்ள மூன்று பிரிவுகளில் வசிக்கும் 692 குடும்பங்களுக்கு தோட்டத்தில் உள்ள பொது கட்டிடத் தொகுதியில் வைத்து தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசி 10 கிலோ கொண்ட பொதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பு எரிவாயு தட்டுப்பாடு போன்றவற்றை மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 10 கிலோ அரிசி மிகவும் உதவி எனவும் இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் எவ்வித உதவியும் செய்யாத நிலையில் தமிழக அரசாங்கம் தமக்கு செய்த பெரிய உதவி என நிவாரண உதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள் தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர்

Udayasooriyan Editor

0 Reviews