நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும்; கெமுனு விஜேரத்ன

 நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும்; கெமுனு விஜேரத்ன

 

போதியளவு டீசல் கிடைக்காவிட்டால், நாளை மறுதினம் முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டீசல் இன்மையால், இன்றைய தினம் சேவையில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கையை 20 சதவீதமாக மட்டுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போக்கள் மூலம், தனியார் பஸ்களுக்கு டீசலை விநியோகிப்பதும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Udayasooriyan Editor

0 Reviews