நுவரெலியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை

 நுவரெலியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (14) பதற்றமான சூழல் நிலவியது

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவசர சேவைகளுக்கு மாத்திரம் என வைக்கப்பட்டிருந்த பெற்றோல் தனியார் ஒருவருக்கு முறையின்றி வழங்கப்பட்டதாக தெரிவித்து அங்கு கூடிய மக்கள் எரிபொருள் நிலைய ஊழியர்களுடன் முரண்பட்டனர்.

முச்சக்கர வண்டியினுள் கேன்களை வைத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பெற்றோல் வழங்கப்பட்டதாகவும் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றோல் வழங்குவதால் வரிசையில் காத்திருப்போர் பெற்றோல் கிடைக்காமல் ஏமாற்றமடைவதாகவும் அங்கு கூடிய மக்கள் தெரிவித்தனர்.

இதன் போது எட்டு மணித்தியாலயம் வரிசையில் காத்திருந்த ஒருவர் இவ்வாறு தெரிவித்தார் – சாதாரண நேரங்களில் எரிபொருள் நிரப்ப சென்றால் எரிபொருள் இல்லை என ஊழியர்கள் தெரிவிகின்றனர். நள்ளிரவு நேரங்களில் சில தனியார்களுக்கு அதிக விலையிலும் அதிக அளவிலும் எரிபொருட்களை வழங்குகின்றனர் என கூறினார்
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா பொலிஸார் பொது மக்களுடன் கலந்துரையாடி மக்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

செ.திவாகரன்

Udayasooriyan Editor

0 Reviews