பங்களாதேஷ் டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர் !

 பங்களாதேஷ் டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர் !

பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய அணித்தலைவராக சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து மொமினுல் ஹக் விலகினார்.

பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ஷகிப் அல் ஹசனும், துணைத் தலைவராக லிட்டன் தாஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

35 வயதான ஷகிப் அல் ஹசன், இதற்கு முன்னர் பல தடவைகள் பங்களாதேஷ் டெஸ்ட் அணிக்கு தலைவராக செயற்பட்டுள்ளார். மேலும் இந்த முறை அணியை வழிநடத்த சரியான நபர் அவர்தான் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

முன்னாள் அணித்தலைவர் மொமினுல் ஹக் அவரது தலைமையின் கீழ் பங்களாதேஷ் அணி 3 டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் 12இல் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Udayasooriyan Editor

0 Reviews