மனம் திருந்துங்கள்

 மனம் திருந்துங்கள்

ரு பணக்காரனுக்கு இரண்டு புதல்வர்கள். ஒருவன் உழைப்பாளி, தந்தையின் சொல்லுக்கு
கட்டுப்பட்டு நல்வாழ்வு வாழ்ந்தான். மற்றொருவன் ஊதாரி. அவனது தொல்லை தாங்காமல் அவனுக்குரிய பங்கை தந்தை பிரித்துக் கொடுத்தார். அவன் ஆடம்பரமாக செலவு செய்தான். ஒருமுறை அவ்வூரில் பஞ்சம் ஏற்பட எல்லாவற்றையும் இழந்த ஊதாரி மகன் பக்கத்து ஊருக்கு பிழைப்புக்குச் சென்றான்.

அங்குள்ள விவசாயியிடம் பன்றி மேய்க்கும் வேலை பெற்றான். ஆனால் விவசாயியோ
அவனுக்கு சாப்பிட தவிடு கூட கொடுக்கவில்லை.பசி தாங்காத அவன், தன் தந்தையின்
சொல்லைக் கேட்காமல் அவஸ்தைப்படுகிறோமோ என்று வருத்தப்பட்டான். கண்ணீர் விட்டு அழுதான். தந்தையிடம் வேலை செய்தாவது பிழைப்போம் என ஊர் திரும்பினான். அவன் மனம் திருந்தி வந்தது தந்தையை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதற்காக அவர் தன் ஊழியர்களுக்கு விருந்தே கொடுத்தார். இது மூத்தவனுக்கு பிடிக்கவில்லை. தந்தையை கடிந்து கொண்டான்.
இந்தக் கதையை சொன்ன இயேசு சொல்கிறார், ”நான் நல்லவர்களைக் காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமந்து கொண்டிருப்பவர்களை மனம் திருந்தச் செய்யவே
வந்திருக்கிறேன்”என்று. நல்லவர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே அவர்கள் நல்ல தன்மைக்கு
ஏற்புடையதாகும்.

Udayasooriyan Editor

0 Reviews