மரம் முறிந்து விழுந்ததில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில்

 மரம் முறிந்து விழுந்ததில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில்
Spread the love

பாடசாலை கட்டிடம் மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த 9 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிமடை, இந்துக் கல்லூரியில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலைக்கு அருகாமையில் உள்ள காணியில் இருந்த மிகப்பழமையான தென்னை மரமொன்றே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது.

விபத்து தொடர்பில் வெளிமடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Udayasooriyan Editor

0 Reviews