யானை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

 யானை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

உலகிலேயே மிகப்பெரிய பாலூட்டி உயிரினம் யானை தான்.நமது இந்திய ஆன்மீகத்தில் யானைகளுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு.இந்துக்கள் யானையை ஒரு புனிதமான விலங்காக கருதுகிறார்கள்.

1. ஆப்பிரிக்க யானைகள் மற்றும் ஆசிய யானைகள் என இரண்டு வகையான யானைகள் உலகில் உள்ளன. வளர்ச்சியடைந்த ஆப்பிரிக்க யானைகள் சராசரியாக 6160 கிலோக்கள் எடையும், ஆசிய யானைகள் சராசரியாக 5000 கீலோக்கள் எடையும் கொண்டவை ஆகும்.

2. யானைகள் சராசரியாக 50 முதல் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடிய உயிரினமாகும்.

3. பெண் யானைகளின் கர்ப்ப காலம் 24 மாதங்கள் ஆகும். அதாவது பெண் யானைகள் 2 வருடங்கள் வரை கர்பமாக இருந்து குட்டி யானைகளை ஈன்றெடுக்கின்றன.

4. மனிதர்களின் குரல்களை அடையாளம் அறிந்துகொள்ளும் திறன் யானைகளுக்கு உண்டு.மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான குரல் வேறுபாடுகள், மொழிகளுக்கு இடையேயான வேறுபாடுகள் முதலியன யானைகளுக்கு தெரியும்.

5. தினந்தோறும் 2 முதல் 3 மணி நேரங்களை மட்டுமே தூங்குவதற்காக யானைகள் செலவிடுகின்றன.

6. தினமும் 12 முதல் 16 மணி நேரங்களை உணவை உண்பதற்காக மட்டும் யானைகள் செலவு செய்கின்றன.

7. யானைகள் அதீத ஞாபக சக்தியை கொண்ட உயிரினம் ஆகும்.

8. மனிதர்கள் இறந்த பிறகு அவர்களது உறவினர்கள் இறுதிச்சடங்குகளை செய்வது வழக்கம்.இதுபோலவே யானை கூட்டத்தில் ஏதாவது ஒரு யானை இறந்து விட்டது என்றால் மற்ற யானைகள் அந்த யானையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்யும். இதுமட்டுமின்றி சில மகிழ்ச்சியான தருணங்களை யானைகள் சேர்ந்து கொண்டாடவும் செய்கின்றன.

9. துள்ளிக் குதிக்க முடியாத ஒரே விலங்கு யானை தான்.

10. மனிதர்களைப் போலவே யானைகளும் உணர்ச்சிவசப்படக்கூடிய உயிரினமாகும். யானைகளுக்கும் மன அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

11. நாய்கள் சக நாய்களுடனேயே சண்டையிடுவதையோ, பூனைகள் சக பூனைகளுடனேயே சண்டையிடுவதையோ அல்லது வேறு எதாவது விலங்குகள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் யானைகள் ஒருபோதும் சக யானைகளோடு சண்டையிடுவதே கிடையாது என்ற யானைகளைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

12. யானைகளின் தந்தங்கள் கறுப்புச் சந்தையில் விற்கப்படுகின்றன தந்தங்களுக்காக உலகத்தில் தினமும் கொள்ளப்படுகின்றன என்ற சோகத்திற்குரிய மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

13. உலக யானை தினம் செப்டம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. இந்த தினம் யானை இனத்தை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டாடப்படுகிறது.

14. ஆங்கில மொழியில் யானைக்கு ‘Elephant’ என்பது பெயராகும். இந்தச்சொல் ‘Elephas’ என்ற கிரேக்க மொழிச்சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும்.

15. யானைகள் நீரில் விளையாடுவதை அதிகம் விரும்புகின்றன. நீச்சலடிப்பதிலும் யானைகள் கில்லாடிகளாக திகழ்கின்றன.

16. இந்தோனேஷிய நாட்டில் தீயணைப்புத்துறையில் வீர விலங்குகளாக பயற்சி அளிக்கப்பட்ட யானைகள் பயன்படுத்துப்படுகின்றன.

17. யானைகளுக்கு கண் பார்வை திறன் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் கேட்பதிலும், நுகர்வதிலும் யானைகளுக்கு அசாத்தியத் திறமை உண்டு.

18. மனிதர்களில் சிலர் வலதுகை பழக்கத்தையும், இன்னும் சிலர் இடதுகை பழக்கத்தையும் உடையவர்களாக உள்ளனர்.இதே போலவே யானைகளிலும் சில யானைகள் வலதுகால் பழக்கத்தையும், சில யானைகள் இடது கால் பழக்கத்தையும் உடையவைகளாக உள்ளன.

19. ரயில் போக்குவரத்து இந்தியாவில் தான் முதன்முதலில் தொடங்கியது. ரயில் போக்குவரத்தின் ஆரம்பகாலத்தில் சரக்குகள்,பெட்டிகளை இழுத்துச் செல்ல யானைகள் பயன்படுத்தப்பட்டன.

20. உலகின் மிகப்பெரிய விலங்காக யானை இருந்தாலும், யானைக்கு எறும்புகள் மற்றும் தேனீக்கள் ஆகிய சிறு உயிரினங்கள் மிகப்பெரிய எதிரிகளாக உள்ளன.

21. யானைகள் பிறக்கும் போது அவை கண் பார்வையற்றவையாகவே பிறக்கின்றன.

Udayasooriyan Editor

0 Reviews