ரசிகை வீட்டுக்கு விசிட் அடித்த “தோனி”..

 ரசிகை வீட்டுக்கு விசிட் அடித்த “தோனி”..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சென்னையில் இருக்கும் தனது ரசிகைக்காக செய்த காரியம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு ஆட்டம் அமையவில்லை. இந்நிலையில், ஐபிஎல் போட்டி முடிந்துள்ள நிலையில் தோனி சென்னையில் திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், தோனி சென்னையில் தனது ரசிகையை நேரடியாக சென்று அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த ரசிகை லாவண்யா, தோனியின் உருவப்படத்தை அவருக்கு பரிசளித்துள்ளார். இதை பார்த்த தோனி அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து ரசிகை லாவண்யா ‘என் வாழ்நாளில் இந்த தருணத்தை மறக்க முடியாது.. தோனியை சந்தித்த உணர்வு வார்த்தைகளால் சொல்ல முடியாது.. அவர் கனிவாகவும், இனிமையாகவும், மென்மையாகவும் பேசக்கூடியவர். அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் எனக்கு என்றென்றும் நினைவில் இருக்கும்.. சாகும் வரை தோனியின் ரசிகையாக இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

Udayasooriyan Editor

0 Reviews