இலங்கையின் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பல்வேறு தனிச்சிறப்புகள் உண்டு. அதேபோல பல்வேறான வரலாற்றுத் தொடர்புகளும் உள்ளன. அந்த வகையில் பல வரலாற்று சிறப்புகளையும் பல்வேறு சுவாரஷ்யமான விடயங்களையும் கொண்டொதொரு மாகாணமாக விளங்குகிறது ஊவா மாகாணம். ஊவா மாகாணத்தின் இரண்டு பிரதான மாவட்டங்களில் ஒன்றாக விளங்கும் மொனராகலை பிரதேசத்தின் சிறப்புகளை இந்தவார நம்ம ஊர் ஸ்பெஷல் பகுதியில் பார்ப்போம். பல அரசர்களின் வரலாற்றோடு தொடர்புடைய மொனராகலை பிரதேசம் சிங்களவர், தமிழர்கள், இஸ்லாமியர்கள் என மூவின சமூகத்தையும் உள்ளடக்கிய ஓர் பிரதேசமாக […]Read More
கத்திமீது நின்று அருள்வாக்கு சொல்லும் கருமாரியம்மன் கோவில்கும்புக்கன பாரவில தோட்ட சிறப்புகள்
தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த எமது முன்னோர்கள் பதுளை ரயில் நிலையத்திலிருந்து காட்டு வழிப்பாதைகள் ஊடாக நடைப்பயணம் மேற்கொண்டு மொனராகலையின் பல பகுதிகளிலும் தமது குடியேற்றங்களை ஆரம்பித்தாக வரலாறுகள் கூறுகின்றன. அந்த வகையில் உருவான தோட்டம் தான் கும்புக்கன பாரவில. பெரும்பான்மை மக்களை அதிகம் கொண்ட மொனராகலை பிரதேசத்தில் தமது பாரம்பரியம், கலை, கலாசாரங்களை உயிர் மூச்சாக கொண்டு வாழ்கிறார்கள் இத் தோட்ட மக்கள். அந்த வகையில் கும்புக்கன பாரவில தோட்டம் பற்றிய சிறப்புகளை இந்த வாரம் நம்ஊர் […]Read More
இனக்கலவரத்தில் எரிக்கப்பட்ட தேர் நினைவுகளை சுமந்து வாழும் ‘விரலிக்காடு’ மக்கள்
கறுப்பு ஜுலை கலவரத்தை இன்றும் தமிழர்களால் மறந்து விட முடியாது. இக் கலவரத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள், சொத்துக்கள் அழிக்கப்பட்டன. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மாத்திரம் அன்றி அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டார்கள். இக் கலவரம் தமிழர்களுக்கு பெரும் மனக்காயத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். பள்ளக்கெட்டுவை பகுதியின் கலப்பிட்டகந்த தோட்டத்தின் அடையாளமாக திகழ்ந்த ‘தேர்’ இந்த வன்முறையின் போது தீயிட்டு அழிக்கப்பட்டது. இது நிகழ்ந்து 39ஆண்டுகள் கடந்துள்ள போதும் இன்றும் கண்ணீர் மல்க இச் […]Read More
(24.03.2022 உதயசூரியனில் பிரசுரமானது) மலையகம் 200 வருட வரலாற்றைக் கொண்டதொரு சமூக கட்டமைப்பு. எங்களின் மூதாதையர்கள் இந்தியாவிலிருந்து வரும்போது வெறுமென உடைமைகளை மாத்திரம் கொண்டுவரவில்லை. பல நூறு வருடம் கட்டிக் காத்த கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் சுமந்து வந்தனர். அப்படி சுமந்து வந்த பாரம்பரிய கலைகளை இன்றும் எம்மவர்கள் பொக்கிஷமாக பேணி பாதுகாத்து, வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் தமிழரின் வீரம், வீரவிளையாட்டுகளின் களஞ்சியமாக காணப்பட்ட தோட்டம் தான் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள நாகவிலை. இத் தோட்டத்தின் சிறப்புகளை […]Read More
நாட்டில் இனவாதம் தலைத்தூக்கி உள்ள இன்றைய சூழ்நிலையில் பெரும்பான்மையினரும் சிறுபான்மை மக்களும் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் ஒற்றுமையாகவும் பலருக்கு முன்னுதாரணமாவும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் தோட்டம் தான் கல்போக். பசறை நகரத்தில் இருந்து 4 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது இத்தோட்டம். எல்டப், கித்துல்கல, டைனாவத்தை என பல பிரிவுகளையும் 60 இற்கும் மேலான குடும்பங்களையும் கொண்டு மடுல்சீமை பிளாண்டேஷன் கம்பனிக்கு கீழாக இயங்கும் ஒரு தோட்டமாகவும் இது உள்ளது. இந்த தோட்டத்தின் பிரதான நுழைவாயிலில் ஒரு விநாயகர் ஆலயமும் […]Read More
பாம்பு என்றால் படையே நடுங்கும். ஆனால் உணுகலை தோட்ட மக்களோ பாம்புகளைக் கண்டு பயப்படுவதில்லை. தோட்டமெங்கும் ஆங்காங்கே பாம்புப் புற்றுகள் நிறைந்திருக்கின்றன. வழமையாக குளிர் நிறைந்த மலையக தோட்டப்புறங்களில் பாம்புகளை காண்பது அரிது. சில தோட்டங்களில் பாம்புகள் தென்படும். ஆனால் பாம்புகளும் பாம்பு புற்றுகளும் அதிகம் இருக்கும் அச்சம் உண்டு பண்ணும் உணுகலை தோட்டம் பற்றி இந்தவாரம் பார்ப்போம். பதுளை ஹாலிஎல நகரிலிருந்து 3 கிலோ மீற்றர் தூரத்தில் அமையப் பெற்ற அழகிய ஊர் தான் உணுகலை […]Read More
இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா (1970 – 1977) பிரதமராக இருந்த காலத்தில், வெளிநாட்டுப் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதித்து உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக மூடிய பொருளாதார கொள்கையினை அமுல்படுத்தினார். அது மக்களைப் பாதிக்காத வகையில் நடைமுறைப் படுத்தாததால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்களை மிகவும் வருத்தியது. இந்தக் காலத்தில் மலையக மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர். வீட்டுத் தோட்டத்தில் இருந்த பலா, வற்றாளை, மரவள்ளி, வாழை என்பன இவர்களுக்கு கை கொடுத்தது. இப்படியான […]Read More
உலகின் வித்தியாமான நட்சத்திர உணவுகங்களில் ஒன்று மலையகத்தில் அமைந்திருக்கிறது என்பதை அறிவீர்களா? மலையகத்தில் பல ஊர்கள் உலகளவில் பெயர்பெற்ற ஊர்களாக காணப்படுகின்றது. எனினும் அது தொடர்பாக எம்மவர்கள் அறிந்திருப்பது அரிது. உலகத்தில் வித்தியாமான 100 உயர்தர நட்சத்திர உணவகங்களில் ஒன்றாக இடம் பிடித்துக் கொண்ட நட்சத்திர உணவகம் ஒன்று கந்தப்பொளை நகரிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்தில் அமையப் பெற்றுள்ள பூப்பனையூரில் உள்ளது. இந்த உணவகத்தை வெளியிலிருந்து பார்க்கும் போது தேயிலை தொழிற்சாலை போலவே காட்சியளிக்கும். இத்தோட்டத்தில் […]Read More
“தனூஷ், ஸ்ரீதேவி வந்து நடனமாடியதால் எங்கள் ஊர் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது” பூண்டுலோயா டன்சினன்
“தூவானம் மெல்ல தூவ தூவ மழைத்துளிகளில் உன்னைக் கண்டேன் …” இந்த பாட்டை தூவானகங்கை வழியே செல்பவர்கள் முனுமுனுத்துக் கொண்டே செல்லும் வழக்கிற்கு வந்துள்ளது.காரணம் அந்நீர்வீழ்ச்சியின் பெயர் தூவானகங்கை என்பதால். பூண்டுலோயா என்றால் அக்கம் பக்கம் ஊர் உட்பட வெளிமாவட்ட ஊர்களிலும் பேசும் இடமாக தூவானகங்கை அமைந்துள்ளது. அழகிய சூழலில் ரம்மியமான இடத்தில் பார்ப்பவர் கண்களை கொள்ளைக்கொள்ளும் இடமாக இவ்நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்நீர்வீழ்ச்சி 100 மீற்றர் உயரத்தில் பூண்டுலோயிவிலிருந்து நுவரெலியா செல்லும் வீதியில் டன்சினன் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் […]Read More









